66e05c25afb44

எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் முனைவர் ரவிக்குமார். ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிக்கை மூலம் கருத்தியல் தளத்திலும், களச் செயல்பாடுகளுக்கு மனித உரிமை இயக்கம் என சமூகப் பணியாற்றி வந்தவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாடகை அலுவலகத்தில் இருக்கும் நிலை இருப்பதாகவும், அவரவர் தொகுதிகளில் தமிழ்நாடு அரசு அலுவலகம் கட்டித் தர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் ரவிக்குமார்.

ரவிக்குமார் எம்.பி

எ(ஏ)ன் தலைவர்! – புதிய பகுதி – என் தலைவர் திருமாவளவன்!

இதுகுறித்து கூறியிருக்கும் அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும்; மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது; இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest