MEA-Spokesperson-Randhir-Jaiswal

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது.

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், இந்தியா, சீனா மற்றும் பிரேசிலில் உள்ள தலைவர்கள் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை உக்ரைனுக்கு எதிரான போரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வையுங்கள்.

நீங்கள் இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ, சீனாவின் அதிபராகவோ இருந்து, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்து, ரஷிய அதிபராக இருக்கும் விளாதிமீர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், 100 சதவிகிதம் பொருளாராதத் தடை விதிக்கப்படும் என புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால் பேசுகையில், “இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் தற்போதைய சந்தை சூழ்நிலை, உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து செயல்படுகிறது.

இந்த விஷயம் குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்து, உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பாதுகாப்பது முக்கியமானது. இந்த விஷயத்தில் இரட்டைத் தரநிலைகள் எதுவும் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

 India rejects Nato chief’s sanctions threat over Russia oil trade

இதையும் படிக்க : காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest