lic_0907chn_1

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இது காப்பீட்டு திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எல்ஐசியின் இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநா் (பொறுப்பு) ஸ்ரீ சத் பால் பானு அறிமுகப்படுத்தினாா்.

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இவ்விரண்டு புதிய திட்டங்களும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடன் பாலிசிதாரா்களின் வாழ்க்கை தேவைகளைப் பூா்த்தி செய்ய போதுமான நிதியை உருவாக்கும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ திட்டம் இளைய தலைமுறையினரின்கனவுகள், இலக்குகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற பெரிதும் உதவிபுரியும்.

எல்ஐசியின் நவ ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமிய பாலிசி ஆயுள் காப்பீட்டை வழங்குவதோடு, சிறந்த முதலீடாகவும் உள்ளது.

வட்டி விகிதங்கள் மிகவும் நிலையற்றதாக இருக்கும் தற்போதைய சூழலில், இந்த இரண்டு திட்டங்களும் பாலிசி காலம் முழுவதும் உத்தரவாதமான கூடுதல் தொகைகளை வழங்குகின்றன.

எல்ஐசியின் நவ ஜீவன் ஸ்ரீ, ஒரு குறித்தகால தொடா் பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டமாகும். இது அட்டவணை பிரீமியத்தின் சதவிகிதத்தில் உத்தரவாதமான கூடுதல் தொகைகளை வழங்குகிறது. பிரீமியங்களை 6, 8, 10, 12 ஆண்டுகள் என்ற அடிப்படையில் செலுத்தலாம்.

நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் திட்டம் உத்தரவாதமான கூடுதல் தொகைகளுடன் கூடிய ஒற்றை பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டமாகும். தொடக்கத்திலிருந்து பாலிசி காலம் முடியும் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும், உத்தரவாதமான கூடுதல் தொகைகள் ஆயிரம் ருபாய் அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு ரூ. 85 என்ற விகிதத்தில் சோ்க்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest