
கோவில்பட்டி: சாகித்திய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நகர்மன்ற தலைவர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 103 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள அவரது நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, சார் ஆட்சியர் ஹிமான்சு மங்கல், வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் உதயசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கி. ராஜநாராயணனின் மகன்களான திவாகர், பிரபாகர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் நினைவரங்கத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ரத்தினகுமார், நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் என். ஆர். கே. என்ற ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் முருகேசன், கி.ராதாகிருஷ்ணன், அயலக அணி துணை அமைப்பாளர் சுப்புராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!