Capture

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்கிற படத்தின் மூலம் மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!

sj suryah’s killer movie first look poster out

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest