
அபிமன்யூ ஈஸ்வரன் கடந்த 2022 முதல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் அபிமன்யூ ஈஸ்வரன்.
உத்தரப் பிரதேஷத்தைச் சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன் (29 வயது) 103 முதல்தர போட்டிகளில் 7,841 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் விளையாட 2022-இல் அழைக்கப்பட்டார். இதுவரை, பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கிறார்.
சாய் சுதர்சன் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடியதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இப்படி பலருக்கும் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.
அபிமன்யூ ஈஸ்வரனுக்காக முகமது கைஃப் போன்ற சில வீரர்கள் மட்டுமே ஆதரவாகப் பேசுகிறார்கள். இருந்தும் பிசிசிஐ ஏன் அவரை கண்டுக்கொள்வதில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
அபிமன்யூ ஈஸ்வரன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் 2022-இல் இணைந்த பிறகு, 15 புதிய வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார்கள். அவர்கள் பட்டியல்:
கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரஜத் படிதார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெஸ்வால், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், நிதீஷ் குமார் ரெட்டி, அன்ஷுல் கம்போஜ்.