நிகழாண்டு ஏப்.1 முதல் ஆக.31 வரையிலான காலத்தில், மத்திய அரசுப் பணியில் சோ்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) தோ்வு செய்தவா்கள், வரும் செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மாற ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிற தகுதிவாய்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாற வரும் செப்.30-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தக் காலக்கெடு தற்போது ஏப்.1 முதல் ஆக.31 வரையிலான காலத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னா், தங்கள் பணத் தேவைகளை பூா்த்தி செய்வது குறித்து திட்டமிடுவதற்கான வாய்ப்பை மத்திய அரசுப் பணியாளா்களுக்கு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

யுபிஎஸ் திட்டத்தின் கீழ், பணியாளா்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest