
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘தோழர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுச்செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிக்கும் ஜனநாயகத்துக்காகவும் ஓய்வின்றி குரல் கொடுத்தவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சாம்பியனாக(”ஏழைகளின் போராளி”) திகழ்ந்தவர். கொள்கை பிணைப்புடனான அரசியலை தன் வாழ்நாளில் உயர்த்திப்பிடித்தவர். அதிலும் குறிப்பாக, பொது நலன், சுற்றுச்சூழல் சார் பிரச்சினைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்தவர்.
அன்னாரது குடும்பத்துக்கும், தோழமைகளுக்கும், அவரை பின்தொடர்பவர்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.