
ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் விடுதியின் 10வது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், தில்லியைச் சேர்ந்த சின்ஹா, உலோகவியல் அறிவியல் நான்காம் ஆண்டு மாணவர்.
மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
தற்கொலை குறித்து அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து மாணவர் ஒருவர் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].