
கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்சிஎல் டெக்(HCL Tech) நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் இருந்தார்.
அவரது மொத்த ஆண்டு வருமாணம் ரூ. 94.6 கோடியாகும். அமெரிக்காவில் வசிக்கும் விஜயகுமார், அடிப்படை ஊதியமாக ரூ. 15.8 கோடியும், செயல்திறனுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ. 13.9 கோடியும், பங்கு ஊதியத்தொகையாக ரூ. 56.9 கோடியும், கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 1.7 கோடியும் பெற்றார்.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, விஜயகுமாரின் சம்பளம் கடந்தாண்டைவிட 7.9% அதிகரித்து காணப்பட்டது.
சம்பளப் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முதலிடத்தைப் பிடித்த நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஊதிய விவரத்தைக் காண்போம்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே. கிருத்திவாசன் ரூ. 26.5 கோடி பெற்றார். இது அவரின் கடத்தாண்டு பெற்ற ஊதியத்தைவிட 4.6% அதிகமாகும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கின் ஊதியம் 22% உயர்ந்துள்ளது. அவரது மொத்த ஊதியம் 80.6% கோடியாகும்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற ஸ்ரீனிவாஸ் பல்லியா, தனது முதல் ஆண்டில் ரூ. 53.6 கோடியை சம்பளமாகப் பெற்றார்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் இந்த நிதியாண்டில் தங்களது ஊழியர்களின் சராசரி ஊதியத்தில் 17.6% அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது 1,67,316 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதைத் தவிர அதன் துணை நிறுவனங்களில் 56,104 பேர் பணிபுரிகின்றனர்.
இதையும் படிக்க: ‘நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்…’ – ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!