ANI_20250825023840

பங்குச் சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,506.40 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 298.23 புள்ளிகள் அதிகரித்து 82,678.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91.45 புள்ளிகள் உயர்ந்து 25,330.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

8 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச் சந்தை திங்கள்கிழமை சரிந்த நிலையில் நேற்று மீண்டும் ஏற்றமடைந்தது. இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையால் இன்றும் பங்குச் சந்தை தொடர்ந்து நேர்மறையில் வர்த்தகமாவது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. ஐடி மற்றும் மீடியா பங்குகள் இன்று அதிக லாபம் பெற்றுள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.5 சதவீதமும் உயர்ந்தன.

நிஃப்டியில் டாடா கன்ஸ்யூமர், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எஸ்பிஐ, கிராசிம், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை முக்கிய லாபத்தைப் பெற்றன. அதே நேரத்தில் டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, எடர்னல், ஐடிசி, அதானி போர்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.

Stock Market Update: Sensex climbs over 250 pts, Nifty above 25,300

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest