
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.26) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாற்றினார். தனது உரையில் அவர், “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது” என்று பேசினார்.