202503243358724

மத்தியப் பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறையின் கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கோளாறு போன்றவை, மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், பணியில் சேர்ந்து, ஆனால், ஒரு நாள் கூட வேலைக்கு வராத காவலர் ஒருவருக்கு 12 ஆண்டுகளாக தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக ரூ.28 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் காவலர் 2011ஆம் ஆண்டு போபால் காவல்துறை பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு, அவர் சாகர் காவல்துறை பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சென்று சேராமல், நேராக விதிஷாவில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டார்.

தனது உயர் அதிகாரிகள் யாரிடமும் விடுப்பு கேட்காமல், தன்னுடைய பணி ஆவணங்களை விரைவுஅஞ்சல் மூலம் போபால் காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு அந்த ஆவணத்தை எந்த விசாரணையும் இன்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest