
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு அல்லது விமானப் படை தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், எரிக் டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலின்போது, மூன்று ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியா் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
சீனாவின் ஜெட் விமானங்கள் மீதான உலக நாடுகளின் நன்மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில், ரஃபேல் விமானங்களின் திறன் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவதாகவும் டிராப்பியர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமானத்தின் தோல்வியானது, 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதில் எதிரிகளின் ஈடுபாடோ அல்லது விரோதமான ரேடார் தொடர்புகளோ இல்லை எனவும் பிரெஞ்சு இணையதள செய்தி நிறுவனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி டிராப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில் சீனா?
பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான ரஃபேல் போர் விமானங்களின் உலகளாவிய நற்பெயரையும், விற்பனையையும் சிதைக்க திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சீனா ஈடுபட்டதாக பிரான்ஸ் ராணுவம் மற்றும் உளவுத்துறை கூறுகிறது.
உலக நாடுகள் ரஃபேல் விமானங்களை வாங்குவதைத் தடுக்கவும், அதற்குப் பதிலாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை வாங்குவதை ஊக்குவிக்கவும் சீனா இப்படி செய்ததாக, பிரான்ஸ் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவிட்டது: எக்ஸ்
One IAF Rafale lost, but not shot by Pakistan says Dassault CEO Eric Trappier