
ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்தியர் ஒருவரை மணமுடித்து ஒரு குழந்தையும் பெற்று தாய்மைப்பேறு அடைந்துள்ளார். இந்தநிலையில், அந்தப் பெண்மணி தான் ஒரு இந்தியரை ஏன் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டேன் என்று வெளிப்படையாக ஒரு விடியோவில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ”முதலில், நான் கணவராக தேர்ந்தெடுத்துள்ளவருக்கு நல்ல சமைக்க தெரியும்! அவர் எனக்காக எப்போதும் சமைத்துக் கொடுப்பார்.
அடுத்ததாக, அவர் அழகான குழந்தைகளை உருவாக்குபவரும்கூட.
பிறகு முக்கியமாக, அவர் எப்போதும் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார், என்னை மிகவும் நேசிக்கிறார்”.
இவையனைத்துமே, நான் ஒரு இந்தியரைத் திருமணம் செய்வதற்கான 3 காரணங்கள் என்று அந்த வெளிநாட்டுப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
இதனை பார்க்கும்போது ’அடேங்கப்பா!’ என்றுதானே சொல்லத் தோன்றுகிறது…