
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் ஓடிடியில் கவனம் பெற்று வருகிறது.
இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன், பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சித்தர் வாழ்வியல், விஞ்ஞான கொலைமுறை என ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த படமாக உருவான இது திரையரங்க வெளியீட்டிலேயே வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தற்போது, மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஓடிடி வெளியீட்டிலும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நல்ல படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கூடுதல் திரைகளில் தலைவன் தலைவி!