
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (ஜூலை 18) வெளியாகிறது.
நடிகர் தனுஷ், ரஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருந்த குபேரா படம், அமேசான் பிரைம் ஓடிடியில் 5 மொழிகளில் நாளை வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள திரில்லர் படமான மனிதர்கள், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
சூரியின் கருடன் படத்தின் தெலுங்கு மொழியில் மறு உருவாக்கமான பைரவம் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.
குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடிகர் சரவணன் நடிப்பில் உருவான சட்டமும் நீதியும் என்ற இணையத் தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படம் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் டெண்ட்கொட்டா ஓடிடியில் நாளை பார்க்கலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான நரிவேட்டை படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்திலும் மூன் வாக் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரிலும் காணலாம்.
இதையும் படிக்க: கருப்பு… ஆர்ஜே பாலாஜி பதிவால் ரசிகர்கள் உற்சாகம்!