GzgKjT9aYAEx8LQ

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதராஸி படம் கடந்த செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

முக்கியமாக, நடிகர் வித்யூத் ஜமாலின் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பும் ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்பட்டது.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மதராஸி திரைப்படம் வரும் அக். 3 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: மகனை கிண்டல் செய்த தனுஷ்..! வெட்கத்தில் தலைகுனிந்த லிங்கா!

Information has been revealed about the OTT release of the film Madarasi starring actor Sivakarthikeyan.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest