
லோகா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக, முக்கிய அறிவிப்பை நடிகர் துல்கான் சல்மான் வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்த ‘லோகா சேப்டர் – 1 சந்திரா’ திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான், ‘லோகா சேப்டர் – 1 சந்திரா’ திரைப்படம் விரைவில் ஓடிடிக்கு வரும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘லோகா சேப்டர் – 1 சந்திரா’ படத்தின் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகளுக்கு ஆபத்து! ரயில்வேக்கு புதிய தலைவலி