
கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்றுவரும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி நினைவு நாணயம் வெளியிட்டு உரையாற்றுகிறாா்.
முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா தன் குழுவினருடன் திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்தினார்.
தொடக்கமாக, ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து முடிக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார்.
பார்வையாளர்கள் அனைவரும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர். பிரதமர் மோடியும் அதனை ரசித்து பார்த்தார்.
இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா, “வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” எனக் கூறினார்.