narendra-modi-roadshow

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார்.

சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8 கி.மீ. தூரத்துக்கு சாலைவலம் மேற்கொள்கிறார்.

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள பொன்னேரியில் பிரதமர் மோடி வந்திறங்கினார்.

அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் வந்திறங்கிய பொன்னேரியில் இருந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட்டார்.

இரு வழிகளிலும் பாஜக, அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடியுடன் குவிந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஆடி திருவாதிரை நிகழ்ச்சியையொட்டி அரியலூருக்கு வருகைபுரிந்துள்ள மோடி, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். பெருவுடையாருக்கு கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யவுள்ளார்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா். பிறகு மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.

நரேந்திர மோடியின் வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

Prime Minister Modi’s roadshow in Gangaikonda Cholapuram!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest