
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸி. அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மே.இ.தீ. அணியை 27 ரன்களுக்குள் சுருட்டி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2021-இல் அறிமுகமான ஸ்காட் போலண்ட் (வயது 36) பெரும்பாலான போட்டிகளில் குளிர்பானங்களை தூக்கியே செலவளித்தார்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் இருப்பதால் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசத்துகிறார்.
இதுவரை 14 போட்டிகளில் 62 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 16.53-ஆக இருக்கிறது.
கடந்த நூறு ஆண்டுகளில் யாருமே இந்த அளவுக்கு சாராசரியைக் கொண்டு பந்துவீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வரலாற்றில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 19.48 உடன் 16-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
1915க்குப் பிறகு 2,000 பந்துகள் வீசியவர்களில் இந்தப் பட்டியலில் போலண்ட் முதலிடத்திலும் பும்ரா 5-ஆவது இடத்திலும் இருக்கிறார்.
நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்
1. ஸ்காட் போலண்ட் – 16.53
2. பெர்ட் அயர்மோன்கர் – 17.97
3. ஃபிராங் டைசன் – 18.56
4. அசாஸ் படேல் – 19.34
5. ஜஸ்பிரீத் பும்ரா – 19.48
மிட்செல் ஸ்டார்க் இவரை, “மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர் ஆஸ்திரேலிய வீரர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.