
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
A train hit a school van carrying children near Chemmanguppam in Cuddalore.
இதையும் படிக்க : கோயில் காவலாளி கொலை வழக்கு! விசாரணை அறிக்கை இன்று தாக்கல்!