புது தில்லி: கப்பல் சரக்கு விவர ஆவணங்கள் மசோதா 2025 மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேறியுள்ளது.

கப்பல் சரக்கு விவர ஆவணத்தில் கப்பல்களில் அனுப்பிவைக்கப்படும் சரக்குகளின் வகை, அளவு, நிலை, எந்த இடத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இந்த ஆவணத்தை சரக்கை அனுப்பி வைக்கும் நிறுவனத்துக்கு சரக்கை வேறு இடத்துக்கு கொண்டு சோ்க்கும் நிறுவனம் வழங்கும்.

இந்நிலையில், கப்பல் சரக்கு விவர ஆவணங்களுக்கான சட்ட விதிமுறைகளை புதுப்பித்து எளிமைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த மாா்ச் மாதம் மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. அவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தபோதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest