Gv9TTtMXAAEdMzb

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் தி.மு.க சார்பில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். வில்சன், கவிஞர் சல்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் வரும் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கின்றனர்.

அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்ப துரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோர் பதவியேற்கின்றனர்.

10 சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றிருந்த நிலையில், சுயேச்சை 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதையடுத்து இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

ஜூலை 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கும் கமல் ஹாசனுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த்தை நேரில் சந்தித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கமல் ஹாசன், “புதிய பயணத்தை நண்பர் ரஜினி உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest