
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
’கருப்பு’ எனப் பெயரிடப்பட் இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
Serving soon @Suriya_offl ❤️❤️❤️#Karuppu pic.twitter.com/UCD1dY6kUV
— RJB (@RJ_Balaji) July 17, 2025
இந்த நிலையில், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தின் டீசரில் இடம்பெற்ற சூர்யாவின் கண்களைப் பதிவிட்டு, “விரைவில் தருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
இதையும் படிக்க: மதராஸி அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!