GwdzxC0XAAAaBpY

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி நாளை (ஜூலை 23) காலை 10 மணிக்கு இதன் டீசர் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா வாயில் சுருட்டுடன் கறுப்பு நிற வேட்டி சட்டை அணிந்துள்ளார்.

A new poster of the film Karuppu starring actor Suriya has been released.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest