
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
“அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை.
உள்துறை அமைச்சரைச் சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீஃப் வைத்துத் துடைத்தேன். ஆனால் இதனை அரசியல் செய்கிறார்கள்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.