
மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான செல்வி சென்னை கோபாலபுரத்தில் புதிதாக சல்வார் மற்றும் சேலைகளுக்கான பிரத்யேக ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி செல்வம். ஆரம்பத்தில் பெங்களுருவில் முரசொலி செல்வம் சன் தொலைக்காட்சியின் உதயா சேனலை கவனித்து வந்தபோது கணவருடன் அங்கேயே இருந்தார்.
பிறகு வயோதிகம் காரணமாக செல்வம் சென்னை திரும்பிய பிறகு இவர்கள் கோபாலபுரத்திலேயே தங்கி விட்டனர்.
இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முரசொலி செல்வம் மறைந்தார்.

இதனையைடுத்து கோபாலபுரத்தில் தங்கியிருந்தபடி தன் தாயாரை அருகிலிருந்து கவனித்து வந்த செல்வி, அங்கேயே அதாவது கலைஞரின் வீடு அமைந்திருக்கும் அதே பகுதியிலேயே பெண்களுக்கான சல்வார் மற்றும் திருமணப் பட்டுகள் உள்ளிட்ட ஆடைகளுக்கான பிரத்யேக ஷோ ரூம் ஒன்றைத் திறந்துள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை நடந்த இந்த ஷோரூமின் திறப்பு விழாவில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட செல்வியின் நெருங்கிய நட்பு வட்டத்தினர் கலந்து கொண்டனர்.