
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார்.