
காந்தாரா சேப்டர் – 1 படத்தில் நடிக்கும் ருக்மினி வசந்த், பாத்திரத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் – 1’ படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காந்தாரா சேப்டர் – 1 படத்தில், நாயகி ருக்மினி வசந்த்தின் பாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் நடிகை ருக்மினி வசந்த், கனகாவதி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.