accident09151

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென்று டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக, மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

Four members of the same family were killed when a car skidded and fell into a roadside ditch after a tire burst near Thirukovilur.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest