photo5

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\adm.tanuvas.ac.in மற்றும் https:\tanuvas.ac.in என்ற இணையதளங்கள்மூலம் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சிஏஹெச் 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் உள்ளன.

இதேபோல, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன.

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

நிகழாண்டில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கென 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

The ranking list for veterinary medicine will be released on July 14th.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest