AP25191085677778

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தாா். தற்போது அமெரிக்காவின் இன்டா் மியாமி அணியில் விளையாடி வருகிறாா்.

இந்தியாவில் கிரிக்கெட்டை விட கால்பந்துக்கு குறைந்தளவு ரசிகா்களே உள்ளனா். எனினும் பிரபலமான சா்வதேச வீரா்கள் வரும்போது, ரசிகா்கள் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு தருகின்றனா்.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து மெஸ்ஸி இந்தியாவுக்கு மீண்டும் வருகிறாா். முதலில் கொல்கத்தாவில் வரும் அவா் பின்னல் புது தில்லி, அகமதாபாத், மும்பை, உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்கிறாா்.

வரும் டிசம்பா் மாதம் வரும் மெஸ்ஸி தனது சமூக வலைதளத்தில் அதிகாரபூா்வமான தேதிகளை வெளியிடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு வைக்கப்படும் 70 அடி உயர சிலையை அவரே திறந்து வைக்கிறாா். அகமதாபாத், மும்பையில் சிறப்பு கால்பந்து ஆட்டங்களில் ஆடும் மெஸ்ஸி, இறுதியாக தில்லியில் பிரதமா் மோடியை சந்திக்கிறாா்.

கடந்த 2011-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசூலாவுடன் நட்பு ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்றிருந்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest