Krishnagiri-accident-edi

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேருந்து, கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

சூளகிரி காவல் துறையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், உயிர் இழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

Three people were killed in a collision between vehicles near Krishnagiri

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest