G05BUctWgAAY66v

நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படம் செப்.25ஆம் தேதி மறுவெளியீடாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக குஷி திரைப்படம் இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்கிறது.

தமிழ் சினிமாவிலும் சரி விஜய் படங்களில் சரி கில்லி திரைப்படம்தான் மறுவெளியீட்டில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

குஷி திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா என சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

An official announcement has been made that the film Khushi, starring actor Vijay, will be re-released on September 25th.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest