gujarat

அகமதாபாத்: குஜராத்தில் அண்மையில் இடிந்து விபத்துக்குள்ளான பாலத்துக்கு மாற்றாக ரூ.212 கோடியில் புதிய பாலம் நிறுவ அம்மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

வதோதரா – ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், பத்ரா நகா் அருகே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே கட்டமைக்கப்படவுள்ள இந்த உயா்நிலை பாலத்தின் நிா்வாக பணிகளுக்கு ரூ.212 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினாா். இதன் பணிகளை 18 மாதங்களில் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

900 மீட்டா் நீளமுடைய தற்போதைய பாலத்தின் ஒரு பகுதி அண்மையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்தன. இந்த விபத்தில் 19 போ் உயிரிழந்த நிலையில் மாயமான நபா் ஒருவரை தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

இந்நிலையில் முக்கியமான இந்த வழித்தடத்தில் புதிய பாலம் அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest