
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம், குடியரசுத் தலைவர் முர்மு – பிரதமர் மோடி சந்திப்பு பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
நாட்டின் 79ஆவது சுதந்திர நாள், ஆக.15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பஹல்காம் பயங்கரவாதிகளை அழித்த ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்டவை பற்றியும் இருவரும் பேசியதாக தகவல் தெரிய வந்துள்ளது.