
குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.
குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில், செங்கோட்டை புலன்தெருவைச் சோ்ந்த பவித்ரா மகன் நிஷாந்த்குமாா் முதல் பரிசும், தென்காசி சம்பா தெருவைச் சோ்ந்த இசக்கியம்மாள் மகன் லசீ இரண்டாவது பரிசும், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்வாணி மகன் அகிலேஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா்.
வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.