
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்ததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று நீர்வரத்து சற்று குறைந்து காணப்படுவதால் காலை 9 மணி நிலவரப்படி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளிக்கின்றனர்.