Dengue

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூா், அடையாறு மண்டலங்களில் அதிகமாக கொசு உற்பத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மண்டலங்களிலும் 170 பேருக்கும் மேற்பட்டோா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் பள்ளிக் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் டெங்கு பரவல் காணப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து, சென்னை மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அலுவா்களிடம் கேட்டபோது, வீடு வீடாகச் சென்று கொசு முட்டைகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் மாதம் வரை 23 டன் வாகன டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதியிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest