6850fda750e76

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி கூட்டணி ஆட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனக் கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘சட்டமன்றத்தில் ஸ்டாலின் திடீரென எழுந்து, ‘பாஜகவுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.’ என்று கூறினீர்களே, இப்போது கூட்டணி வைத்துவிட்டீர்களே என்றார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது.

‘அதிமுக எங்களின் கட்சி. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். அதைக் கண்டு நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?’ என பதில் கூறினேன். ஸ்டாலின் அமைதியாகிவிட்டார். இதோ இப்போது அதிமுக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டு விட்டது எனப் பேசுகிறார்கள். ஸ்டாலின் அவர்களே நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களை வென்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா, அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா, அண்ணாமலை

எங்களுக்கு கூட்டணி உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டோம். நீங்கள்தான் உங்கள் வாரிசுக்காக ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறீர்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்பது மக்கள் விருப்பம். திமுக ஒரு ஊழல் கட்சி என்பது பாஜகவின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இணைந்திருக்கிறோம். இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் சரியான நேரத்தில் இணையும்.’ என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் அவர்களே… என திமுகவை எதிர்க்கும் சாக்கில் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும் அமித்ஷாவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான மெசேஜை கடத்தியிருக்கிறார். ‘கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ள ஏமாளிகள் அல்ல.’ என்ற எடப்பாடியின் ஸ்டேட்மெண்ட்டுக்கு பாஜகவின் ரியாக்சன் என்னவாக இருக்கும்?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest