
கூலி படத்தில் இடம் பெற்றிருந்த மோனிகா விடியோ பாடல் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் ஆமிர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ஃபகத் ஃபாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மோனிகா’ பாடல் வெளியானபோதே, ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் ரீல்ஸ்களால் வைரலானது.
திரையரங்க வெளியீட்டிலும் இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிரின் நடனம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், மோனிகா பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூபில் 14 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலின் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சுப்லாஷ்னி, அனிருத் பாடியிருந்தனர்.
கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா – 1!