
நடிகர் நாகார்ஜுனா கூலி இசை வெளியீட்டு விழாவில் கூலி திரைப்படம் 100 பாட்ஷாவுக்கு சமம் எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.2) வெளியாகியுள்ளது.
அனிருத்தின் பின்னணி இசையுடன் ரஜினி, நாகர்ஜூனா, ஆமிர் கான் கதாபாத்திரங்கள் அறிமுகமாவது, சண்டைக் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அதிவேகமாக, 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும் கிடைத்திருக்கின்றன.
நேற்றிரவு இதன் இசைவெளியீட்டு விழா நடந்தது. அதில், பலர் கலந்துகொணடனர். இந்த விழாவில் நாகார்ஜுனா பேசியதாவது:
இந்த கூலி திரைப்படம் 100 பாட்ஷா படங்களுக்கு சமமானது. நான் இதில் சைமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
ஓஜி சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டுமே எனப் பேசினார்.
கூலி திரைப்படம் வரும் ஆக.14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.