Mumbai-Rains-4

கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு: தென் தமிழகம் மற்றும் மன்னாா் வளைகுடாவில் 5.8 கி.மீ. உயரத்தில் சூறாவளி சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) நான்கு மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமை (ஆக. 4) மூன்று மாவட்டங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (ஆக. 5) 10 மாவட்டங்களுக்கும், புதன்கிழமை (ஆக. 6) ஆறு மாவட்டங்களுக்கும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஜூலை 27-ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest