
கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தம்பனூர் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாய் மற்றும் வெடிகுண்டுப் படைகளின் உதவியுடன் நாங்கள் முழுமையான சோதனைகளை மேற்கொண்டோம். ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!
சோதனையின் போது முதல்வர் பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்தனர் என்றார்.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களை குறிவைத்து சமீபத்தில் வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுடன் இந்த மிரட்டல் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.