
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இன்னும் 225 ரன்கள் பின்தங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இமாலய இலக்கை சேஸிங் செய்த முதல் ஓவரிலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் – ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.