202507203457197

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர் கலெத் பிண் தலால் அல் சவூத்தின் மகனான இளவரசர் அல்வாலீத் பின் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் லண்டனில் கடந்த 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கினார். லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் பயின்றபோது சாலை விபத்தில் சிக்கிய அவருக்கு மூளையில் படுகாயம் உண்டானது.

இதனையடுத்து, இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் சுமார் 20 ஆண்டுகள் படுத்த படுக்கையில் ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரது உயிர் சனிக்கிழமை(ஜூலை 19) இரவு பிரிந்தது. அவருக்கு வயது 36.

மூளையில் படுகாயமடைந்து ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்தும் அவரை இயல்புநிலைக்கு திரும்ப வைக்க முடியவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

அவருக்கு ரியாத்திலுள்ள இமாம் துர்க்கி பிண் அப்துல்லா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) இறுதிசடங்கு செய்யப்படுகிறது.

Saudi Arabia’s ‘Sleeping Prince’ Alwaleed bin Khaled bin Talal bin Abdulaziz Al Saud died in the age of 36

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest