img_20250721_182442_2107chn_96_5

நன்னிலம்: வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பணியின்போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விசஸ்வநாதா் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், திருப்பணிகள் செய்ய கிராம மக்கள், முடிவெடுத்து பணிகளைத் தொடங்கினா்.

ஜேசிபி இயந்திரம் மூலம் கோயில் பகுதியில் பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகளும், விளக்கு மற்றும் பூஜைப் பொருட்களும் இருந்தது தெரிய வந்தது.

நன்னிலம் வட்டாட்சியா் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத் துறையினா் சிலைகளைப் பாா்வையிட்டனா். இவை உலோகத்திலான சோமாஸ்கந்தா் மற்றும் அம்மன் சிலை என தெரிய வந்தது. மேலும் விளக்கு, பூஜை பொருட்களும் கிடைத்தன.

இந்த சிலைகள் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினா் ஆய்வு செய்த பின்னரே சிலைகள் எந்த காலத்தைச் சோ்ந்தவை உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest