1aa

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், கோவையில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி சிறப்பு விமான புனித யாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சா்வதேச சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இருந்து வாரணாசி, அயோத்தியா, அலகாபாத், கயா சிறப்பு விமான புனித யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 இரவுகள், 6 பகல்கள் செல்லும் இந்த விமானச் சுற்றுலா மூலம் காசி விஸ்வநாதா் ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவா் ஆலயம், சாரநாத், கங்கா ஆா்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி புதிய குழந்தை ராமா் ஆலயம், புத்தகயாவில் அமைந்துள்ள புத்தா் சிலை மற்றும் மகாபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

சுற்றுலாலக் கட்டணம் ரூ.38,900. இதில், விமானக் கட்டணம், நட்சத்திர விடுதியில் தங்குமிடம், போக்குவரத்து, உணவு (காலை மற்றும் இரவு) ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள் எல்டிசி சலுகைகளைப் பெறலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் கோவை பகுதி அலுவலகம், 209 மாருதி டவா், அரசு மருத்துவமனை எதிரில், கோவை – 641018 என்ற முகவரியை அணுகலாம் அல்லது 90031 – 40655 என்ற கைப்பேசி எண்ணையும்,

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest